Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 10, 2025

பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த தொகுப்பூதிய பணியாளர்களை காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்திட கோரிக்கை :



ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் முழு நேர தொகுப்பூதிய பணியாளர்கள் பணிபுரிபவர்கள் குறித்து ஒருங்கிணைந்த பள்ளி கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் வா. ராஜ்குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில்.

பள்ளி கல்விதுறையின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில் 1395 முழுநேர தொகுப்பூதிய பணியாளர்கள் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் தொகுப்பூதிய பணியாளர்கள் மிக குறைந்த ஊதியத்தில் பணி புரிந்து வருகிறார்கள், திமுக தேர்தல் அறிக்கையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது ஆனால் திமுக அரசு பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் இது சார்ந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை மாறாக கல்வித்துறையில் தொகுப்பூதிய பணியிடங்களை நிரந்தரம் செய்யபட்டது.

முழு நேர தொகுப்பூய பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கிறோம்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் முழு நேர தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணையமானது மத்திய அரசு நிதி வழங்கினால் தான் ஊதியஉயர்வு வழங்கப்படும் என்று இல்லாமல் தமிழ்நாடு அரசே தனது மாநில அரசு கூடுதல் நிதியிலிருந்து நடப்பாண்டில் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு சமமான ஊதிய உயர்வை வழங்கப்பட வேண்டும்,

அதே போல தொகுப்பூதிய பணியாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான விருப்பப் பணி மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டார்..

வா.ராஜ்குமார்
மாவட்ட செயலாளர்,
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி
தொகுப்பூதிய பணியாளர்கள் நலச் சங்கம் 34/2020,
கடலூர் மாவட்டம்.
செல்.9788887225

No comments:

Post a Comment