Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்ட அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் 85-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகளை மார்ச் மாதத்துக்குள் மூடும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டு வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது” என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், நீலகிரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) நந்தகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில். “நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மாவட்டக் கல்வி அதிகாரி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள எந்த அரசுப் பள்ளியையும் மூடும் திட்டமோ, உத்தரவுகளோ இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment