Join THAMIZHKADAL WhatsApp Groups
சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் முன்பும், சாப்பிட்டு அரைமணி நேரம் பிறகும் , கடலைமிட்டாய் சாப்பிட்டால் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.இதனால் இன்சுலின் சரியாக உற்பத்தி செய்யப்பட்டு சிறுகுடல் மற்றும் பெருங்குடல் தனது வேலையை எளிதாக செய்ய உதவுகிறது.
இன்று SNACKS என்ற பெயரில் நாம் வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் அது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை. அதுமட்டுமல்ல முந்திரிபருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா இவற்றில்தான் சத்து அதிகம் என்று நாம் நினைக்கின்றோம். உண்மையில் உடலுக்கு அனைத்து நன்மைகளையும் அள்ளி தருவது கடலைமிட்டாய் தான்.
இதில் கடலையும் வெல்லமும் சேர்ந்து ஒரு அருமையான சுவையான மற்றும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கிறது.
பொதுவாக கடலையில் பித்தம் இருந்த போதும் அதனுடன் வெல்லம் சேர்க்கப்படும் பொழுது கடலையில் உள்ள பித்த சேர்க்கையை சீர் செய்துவிடும். நிலக்கடலையில் கார்போஹைட்ரேட்டும், நார்ச் சத்தும் சேர்ந்து கரையும் நல்ல கொழுப்பை உருவாக்குகிறது.மேலும் இதில் புரோட்டீன், வைட்டமின்கள், இரும்புச்சத்து. கால்சியம். துத்தநாகம், மாங்கனீஸ், ,பாஸ்பரஸ். பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளது.
அதேபோன்று வெல்லத்தில் பல்வேறு சத்துக்களும் இரும்பு சத்தும் கால்சியமும் அபரிமிதமாக உள்ளது.
மேலும் நிலக்கடலையில் உள்ள விட்டமின் பி உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது தசைகளின் வலிமைக்கும் இது உதவுகிறது.
மேலும் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமல்ல இதிலுள்ள விட்டமின் பி 3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு நினைவாற்றலை அதிகரிக்க உதவும். எனவே கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸாக கொடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.
அதேபோன்று நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனே அன் சாச்சுரேட், போலிக் அமிலம் போன்றவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது. அந்தவகையில் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது இந்த நன்மைகள் இயல்பாகவே கிடைத்துவிடும். அதுமட்டுமல்ல நிலக்கடலையில் அதிக அளவு புரோட்டீன் உள்ளது சோயாபீன்ஸிற்கு அடுத்து தரமான உயர்ந்த புரதம் வேர்க்கடலையில் தான் உள்ளது. முட்டையில் உள்ளதைவிட இரண்டரை மடங்கு அதிகமான புரதம் நிலக்கடலையில் உள்ளது.
அதாவது இறைச்சி உணவுகளுக்கு நிகரான சத்துக்கள் இதில் கிடைக்கிறது. மேலும் வெல்லத்துடன் சேர்ந்து இதன் மருத்துவ நன்மைகள் மேலும் அதிகரிக்கிறது. அதேபோன்று நிலக்கடலையில் ட்ரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த செரட்டோன் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. எனவே இந்த கடலை மிட்டாயை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் அவசியம் சாப்பிட வேண்டும்.
அதேபோன்று நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியம்.
கருப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள் நீர்கட்டிகள் ஏற்படாதது.
கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். அதிலும் இவர்கள் கடலை மிட்டாய் சாப்பிடும் பொழுது அதன் பலன் அதிகம்.
No comments:
Post a Comment