Join THAMIZHKADAL WhatsApp Groups
அத்தனைக்கும் அரு மருந்து:
வெந்தயம் என்ற சமையல் அறையில் இருக்கும் விதைகள் இத்தனை நன்மைகள் உடையதா? என்று வியப்படைய வேண்டி இருக்கிறது. சிறுவயதில் அடிவயிற்று வலி என்றால் கொஞ்சம் வெந்தயத்தை கொடுத்து வாயில் போட்டுக்கொண்டு தண்ணீர் குடிக்க சொல்வார்கள் என் தாயார் .
ஆனால் மிகப் பெரிய பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு சாதாரண சமையலறை அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் வெந்தயம் பயன்படுகிறது என்றால் அதை நாம் ஏன் முறையாக பயன்படுத்தக் கூடாது?
சர்க்கரை குறைபாட்டை அக்கறையோடு விரட்டும்:
வெந்தயத்தை அப்படியே போட்டுக் கொண்டு தினமும் விளங்குவது ஒரு சிலர் பழக்கம் இன்னும் சிலர் வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்து தினம் ஒரு ஸ்பூன் அளவில் சாப்பிடுவது என்ற பழக்கத்தை உடையவர்கள் ஆனால் இதையெல்லாம் தாண்டி கொஞ்சம் மெனக்கெட்டு வெந்தயத்தை முளைகட்டி பயன்படுத்தும் பழக்கத்திற்கு நாம் வரவேண்டும்.
தினமும் 20 கிராம் அளவு முளைக்கட்டிய வெந்தயம் உங்கள் சர்க்கரையை இரண்டு மாதங்களில் கட்டுக்குள் கொண்டு வந்து விடும் இதை நானே பரிசோதித்து பார்த்தேன் என் நண்பர்களுக்கு சொல்லி அவர்களும் பலன் கண்டிருக்கிறார்கள் என்பதால் என் முகநூல் நண்பர்களுக்கும் சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
ஊறவைத்த வெந்தயம் ஊருக்கே நல்லது:
வெந்தயத்தை தேவையான அளவு எடுத்துக் கொண்டு ஆறு மணி நேரங்கள் ஊற வைக்க வேண்டும் பிறகு அதை சுத்தமான துணியில் வடிகட்டி எடுத்து கட்டி 8 மணி நேரம் வைத்தால் முளைப்பு வந்துவிடும் ஒன்றரை சென்டிமீட்டருக்கும் சற்று அதிகமாக முளைப்பு வந்து விட்டால் அதில் இருக்கும் உங்களுக்கு பிடிக்காத கசப்பு சுவை நீங்கிவிடும் ஆனால் பலன் அதேதான் சாப்பிடுவதற்கு அவ்வளவு அருமையாக இருக்கும் ஆனால் 20 கிராம் அளவு போதுமானது இதை இரவு நேரங்களில் படுப்பதற்கு முன்பு சாப்பிடலாம் அல்லது காலையில் உணவு உண்ட பிறகு சாப்பிடலாம் ஏனென்றால் இரவில் சாப்பிட்ட உணவுக்கு வேலை இல்லை என்பதால் சர்க்கரை அதிகமாகும் அதை கட்டுக்குள் வைக்க இது மிகவும் பயன்படும்.
காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் லோ சுகர் ஆகும் என்பதால் காலை சிற்றுண்டி முடித்த பிறகு கூட சாப்பிடலாம்.
இதயபாதுகாப்பின் இதயம்:
சில ஆய்வு முடிவுகள் இதய பாதுகாப்பிற்கு இது மிகப் பெரிய உறுதுணையாக இருக்கிறது என்று சொல்கிறது முக்கியமாக ரத்தக் குழாய்களில் கொழுப்பு சேருவதை இது தடுக்கிறது.
உங்களையார் என்று எடை போடும்:
உங்கள் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெந்தயம் பயன்படுகிறது அது மட்டுமல்ல அதிகப்படியான எடை இருப்பவர்கள் தொடர்ந்து சாப்பிட்டால் எடை குறைந்து உங்களை ஸ்லிம் அண்ட் பிட்டாக காட்டும் அற்புதத்தை செய்யும் முளைகட்டிய வெந்தயம்.
முடிஉடை வேந்தர்கள்:
பள்ளிச்செல்லும் மாணவ மாணவிகளுக்கு கூட முடி உதிர்தல் பிரச்சனை இப்பொழுதெல்லாம் ஆரம்பித்து விடுகிறது அதேபோல பொல்லாத பொடுகு தொல்லை தருகிறது இந்த இரண்டு பிரச்சனைகளுக்கும் உள்ளுக்கு எடுத்துக் கொள்ளும் வெந்தயமும் சரி செய்யும் அதே சமயம் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலைக்கு தடவிக் கொண்டாலும் இந்த பிரச்சனை தீர்க்கப்படும் நீங்கள் முடி உடைய வேந்தர்களாக உலா வரலாம் என்பதற்கு இது கேரண்டி.
இந்தியாவின் இரும்பு மனிதர்கள்:
இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்று நீங்களும் உடலில் இரும்பு சத்து அதிகமான மனிதராக போற்றப்படுவீர்கள். வெந்த+அயம்
என்ற சொல் சமைத்த இரும்புச் சத்து என்ற பொருளை தருகிறது என்று சித்த மருத்துவம் சொல்கிறது அதாவது இரும்புச்சத்தை நீங்கள் சமைத்து சாப்பிடுகிறீர்கள் என்று பொருள் அந்த அளவிற்கு உங்கள் இரும்பு சத்து அளவை சரி செய்து உங்களை இரும்பு மனிதர்களாக உலா வரச் செய்யும் மேஜிக்கை செய்கிறது வெந்தயம்.
அந்த மூன்று நாட்கள்:
மாதவிடாய் காலங்களில் அடிவயிற்று வலி வயிற்றுக் கடுப்பு போன்றவற்றால் அவதியுறும் பொழுது அந்த நாட்களில் வெந்தயம் பலன் தரும் என்ற சிந்தனை பெண்களுக்கு பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு வர வேண்டும் இதை நீங்கள் முன்கூட்டியே முளைகட்டி வைத்து திட்டமிட வேண்டும்.
கண்ணான கண்ணன்:
கண்ணான கண்ணன் என்று போற்றப்படும் அளவிற்கு உங்கள் கண் பாதுகாப்பிற்கு கண்ணுக்கு குளிர்ச்சி தரும் அற்புத பொருளாக முளை கட்டிய வெந்தயம் திகழ்கிறது.
மூல நோய்க்கு காலன்:
மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து ஆரம்பித்து அதன் முற்றிய நிலையான மூலநோய் வரை சரி செய்யும் வேலையை செய்கிறது முளைக்கட்டிய வெந்தயம்.
மூன்று முக்கிய சத்துக்கள்
வைட்டமின் சி,இரும்பு சத்து, பொட்டாசியம் ஆகிய மூன்றும் மிகவும் அவசியமான ஒன்று இந்த மூன்றும் ஒரு சேர உங்களுக்கு கிடைக்கிறது என்றால் அது முளைக்கட்டினால் மாத்திரம் சாத்தியம் அதனால் முளைகட்டிய வெந்தயம் உங்களுக்கு இந்த கூடுதல் பலனை தருவதற்காக காத்திருக்கிறது.
உடல் சூட்டிற்கு உலை வைக்கும்:
தொடர்ந்து முளைகட்டிய வெந்தயம் சாப்பிட்டு வர உடல் சூடு குறைந்து கட்டுக்குள் வரும் என்பதால் இதுவும் ஒரு கூடுதல் பலன் ஆனால் மேற்கண்ட எல்லா விஷயங்களையும் சரிசெய்யும் வெந்தயத்தை சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் யோசித்து சாப்பிட வேண்டும். அல்லது அவர்கள் வறுத்து பொடி செய்து வெந்தயத்தை பயன்படுத்தலாம். ஏனென்றால் அந்த அளவிற்கு குளிர்ச்சியை அள்ளி வழங்கக் கூடியது முளைகட்டிய வெந்தயம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
மளிகை லிஸ்டில் நம்பர் ஒன்:
மளிகை லிஸ்டில் நம்பர் ஒன்:
என்ன இந்த மாசம் மளிகை லிஸ்டில் முதல் மரியாதை இதற்குத்தானா?
ஒரு கிலோ வெந்தயம் வாங்கினால் போதுமா?
சாப்பிட ஆரம்பியுங்கள் இரும்பு சத்துக் கூடும் அப்புறம் மளிகை சாமானை தூக்குவதற்கு அந்த வெந்தயமே உங்களுக்கு உதவிடும் 😀.
No comments:
Post a Comment