Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, February 2, 2025

JEE முதன்மை தேர்வு - 13 லட்சம் பேர் பங்கேற்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வை 13 லட்சம் பேர் எழுதியதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என இது 2 பிரிவாக நடைபெறுகிறது. இதில் முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தி வருகிறது.

அதன்படி, 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 13.78 லட்சம் பேர் விண்ணப்பித்ததில், 13 லட்சம் பேர் (94.5%) வரை தேர்வில் பங்கேற்றனர் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

நெட் தேர்வு: கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் ‘நெட்’ தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். என்டிஏ சார்பில் இந்த தேர்வு நாடு முழுவதும் ஜனவரி 3 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுத 8.49 லட்சம் பட்டதாரிகள் விண்ணப்பித்த நிலையில், 6.49 லட்சம் பேர் (76.5%) மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். இவர்களது விடைத்தாள்கள் துரிதமாக திருத்தப்பட்டு, முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News