Join THAMIZHKADAL WhatsApp Groups
சூழ்நிலை மனிதனை உருவாக்குகிறது.
A man is affected by his environment.
இரண்டொழுக்க பண்புகள் :
* பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர் எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.
*பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் எனவே பெரியவர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன் .
பொன்மொழி :
என்னை யார் தோற்கடித்தது என்று கோபத்துடன் பார்த்தேன், வேறு யாரும் இல்லை கோபம் தான் என்னைத் தோற்கடித்தது.---ஹிட்லர்
பொது அறிவு :
1. பொட்டாஷ் படிகாரம் ஒரு
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
அதிகப்படியான நீர் தாவர வேர்கள் மற்றும் மண்ணில் நச்சு சேர்மங்கள் குவிவதற்கும் வழிவகுக்கும்.
நீதிக்கதை
ஓர் ஊரில் பெரிய பண்ணையார் ஒருவர் இருந்தார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருக்குத் தான் சொந்தம்.
அவரிடம் முனியன் என்ற உழவன் வேலை பார்த்து வந்தான். அவனுக்குக் குடிசை ஒன்றும் சிறிதளவு நிலமும் இருந்தன.
பண்ணையாரிடம் வந்த அவன், ” ஐயா! எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டு விட்டார்கள். என் நிலம் மட்டும் தான் வெறுமனே உள்ளது. நீங்கள் சிறிது தானியம் தாருங்கள். என் நிலத்திலும் விதைத்து விடுகிறேன்” என்றான்.
” என் நிலத்திலேயே உழுது பயிரிடு. சொந்தமாகப் பயிரிட வேண்டாம்" என்று கோபத்துடன் சொன்னார் அவர்.
சோகத்துடன் வீடு திரும்பினான் அவன்.
தன் மனைவியிடம், ” நாம் வளம் பெறுவது பண்ணையாருக்குப் பிடிக்கவிலலை. தானியம் தர மறுத்து விட்டார். நீயும் நம் குழந்தைகளும் எப்போதும் போலப் பட்டினி கிடக்க வேண்டியதுதான். இதுதான் நம் தலைவிதி” என்று வருத்தத்துடன் கூறினான்.அவர்கள் குடிசையில் குருவி ஒன்று கூடு கட்டியது.
இதைப் பார்த்த அவன் மனைவி ” நம் குடிசை புயலுக்கும் மழைக்கும் எப்பொழுது விழுமோ என்று நாம் அஞ்சுகிறோம். இங்கு வந்து குருவி கூடு கட்டுகிறது பாருங்கள்” என்று கணவனிடம் சொன்னாள்.” பாவம்! வாய் பேச முடியாத உயிர் அது. நிலைமை புரிந்தவுடன் அதுவே இங்கிருந்து போய்விடும். நாம் அதற்குத் தொல்லை செய்ய வேண்டாம்” என்றான் அவன். கூட்டில் அந்தக் குருவி நான்கு முட்டைகள் இட்டது. நான்கும் குஞ்சுகளாயின.
திடீரென்று அந்தக் குருவிக் கூட்டுக்குள் ஒரு பாம்பு நுழைந்தது. குருவிக் குஞ்சுகளைப் பிடித்துச் சாப்பிடத் தொடங்கியது. அவை அலறின.
அங்கு வந்த உழவன் பாம்பை அடித்துக் கொன்றான். அதற்குள் அது மூன்று குஞ்சுகளைத் தின்று விட்டது. தரையில் விழுந்த ஒரு குஞ்சு மட்டும் உயிரோடு இருந்தது.
அதை அன்போடு எடுத்தான். அவன். அதன் கால் உடைந்திருப்பதைக் கண்டு அதற்குக் கட்டுப் போட்டான். அதை மீண்டும் கூட்டில் வைத்தான். வேளா வேளைக்கு உணவு தந்தான்.சில நாட்களில் அந்தக் குருவியின் கால்கள் சரியாயின. அங்கிருந்து அது பறந்து சென்றது. உழவனும் குடும்பத்தினரும் வறுமையில் வாடினார்கள்.
” இப்படியே அரை வயிறு சாப்பிட்டு எவ்வளவு காலம் வாழ்வது? நமக்கு விடிவே கிடையாதா?” என்றாள் மனைவி.
அப்பொழுது அவர்கள் வீட்டுக் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டது. கதவை திறந்தான் அவன்.
அவன் வளர்த்த குருவி வெளியே இருந்தது. அதன் வாயில் ஒரு விதை இருந்தது. அதை அவன் கையில் வைத்தது. ” இதை உன் வீட்டுத் தோட்டத்தில் நடு” என்று சொல்லிவிட்டுப் பறந்தது அது.
குருவி சொன்னபடியே விதையை நட்டான் அவன்.மறுநாள் காலையில் அங்கே பெரிய பூசணிக் காய் காய்த்து இருந்தது . இதைப் பார்த்து வியப்பு அடைந்தான் அவன்.
தோட்டத்தில் இருந்த பூசணிக் காயை வீட்டிற்குள் கொண்டு வந்தான். அதை இரண்டு துண்டாக வெட்டினான்.
என்ன வியப்பு! அதனுள் இருந்து விதவிதமான உணவுப் பொருள்கள் வந்தன. சுவையான அவற்றை எல்லோரும் மகிழ்ச்சியாக உண்டனர். மீண்டும் அந்தப் பூசணிக் காயை ஒன்று சேர்த்தனர். பழையபடி அது முழுப் பூசணிக் காய் ஆனது.
மகிழ்ச்சி அடைந்த அவன், ” இது மந்திரப் பூசணிக் காய். நமக்கு உணவு தேவைப்படும் போது பிளந்தால் உணவு கிடைக்கும். மீண்டும் சேர்த்து விட்டால் பழையபடி ஆகி விடும். இனி நமக்கு உணவுப் பஞ்சமே இல்லை” என்றான்.
”
அதன் பிறகு அவனும் மனைவியும், குழந்தைகளும் நல்ல உணவு உண்டனர். அவர்களது உழைப்பால் நல்ல ஆடைகளை அணிந்தனர். மிகப் பெரிய வீடு ஒன்றைக் கட்டத் தொடங்கினார்கள்.
நீதி : பிறருக்கு நீங்கள் உதவ முன் வந்தால்,கடவுள் உங்களுக்கு உதவ முன் வருவார்.
இன்றைய செய்திகள்: 05.03.2025
No comments:
Post a Comment