Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 5, 2025

மே 13-ல் கணினிவழியில் ஆராய்ச்சி உதவித்தொகைக்கான பிஇடி நுழைவுத் தேர்வு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பயோ டெக்னாலாஜி ஆராய்ச்சி உதவித்தொகைக்கான பிஇடி நுழைவுத்தேர்வு மே 13-ம் தேதி நடைபெற உள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.

மத்திய பயோ டெக்னலாஜி ( உயிரி தொழில்நுட்பம்) துறையின் சார்பில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஜேஆர்எப் எனும் இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை கிடைப்பதற்கு பிஇடி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும். பிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதல் 2 ஆண்டுகள் மாதந்தோறும் ரூ.31,000-ம், அடுத்த 3 ஆண்டுகள் மாதந்தோறும் ரூ.35,000-ம் என்றளவில் உதவித்தொகை அளிக்கப்படும். இந்த பிஇடி தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நடப்பாண்டுக்கான பிஇடி தகுதித் தேர்வு கணினி வழியில் மே 13-ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://dbt2025.ntaonline.in/ என்ற இணையதள வழியாக மார்ச் 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1,300-ம், எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.650-ம் செலுத்த வேண்டும்.

இதுதவிர விண்ணப்பங்களில் ஏதும் திருத்தம் இருப்பின் மார்ச் 30, 31-ம் தேதிகளில் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மேலும், தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News