Join THAMIZHKADAL WhatsApp Groups
மரணத்தைத் தவிர அனைத்தையும் குணமாக்கும்; இதை ரெகுலரா சாப்பிட்டா ஹார்ட் அட்டாக் வர வாய்ப்பே இல்லை: டாக்டர் ஆஷா லெனின்
தினமும் ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், பி.சி.ஒ.டி கருமுட்டை நீர்க்கட்டிகள், தள்ளிப்போகும் மாதவிடாய், உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பவர்களுக்கு இந்த மருந்து முக்கிய தீர்வாக அமையும்
இன்றைய காலக்கட்டத்தில் உணவு பழக்க வழக்கங்கள் மாறி வருவதால், வயது முதிர்ச்சியில் வரக்கூடிய நோய்களை இளைஞர்கள் இளம் வயதிலேயே சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் சர்க்கரை நோய், கிட்னி கல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களை தற்போது முதியவர்களை விடவும் இளைஞர்கள் அதிகமாக சந்தித்து வருவது வழக்கமாகிவிட்டது. இந்த நோய்கள் அனைத்திற்கும், இயற்கையில் கிடைக்கும் மூலிகைகள் வைத்து தீர்வு காணலாம்.
அந்த வகையில் வகையில் மரணத்தை தவிர மற்ற அனைத்து நோய்களையும் கட்டுக்குள் வைக்கும ஒரு மூலிகை இருக்கிறது. இது குறித்து டாக்டர் ஆஷா லெனின் கூறுகையில், கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் இந்த மூன்றையும் எடுத்துக்கொண்டு, நன்றாக வறுத்து பவுடராக எடுத்து வைத்துக்கொள்ளவும். இதை தினமும் ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், பி.சி.ஒ.டி கருமுட்டை நீர்க்கட்டிகள், தள்ளிப்போகும் மாதவிடாய், உள்ளிட்ட பிரச்னைகளை சந்திப்பவர்களுக்கு இந்த மருந்து முக்கிய தீர்வாக அமையும்.
மரணத்தை தவிர எல்லா நோய்களுக்குமான அருமருந்து கருஞ்சீரகம். இதில் இருக்கும் சத்துக்கள், புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. கருஞ்சீரகம் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பே இல்லை. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் சாப்பிட்டால், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளை நீக்கும்.
5 கொய்யா இலை, ஒரு ஸ்பூன் சீரகம், வெந்தயம், 5 ஆவாரம்பூ ஒன்றாக சேர்த்து ஒரு டம்பளர் தண்ணீரில் கொதிக்க வைத்து அரைடம்ளராக ஆனவுடன், காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்தால், உடலில் சர்க்கரை வியாதி இருக்காது.
பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகைகளில், பனங்கிழங்கு, மற்றும் முள்ளங்கி மட்டுமே சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம். வெளியில் ஆப்பில், பப்பாளி, கொய்யாக்கா, நாட்டு நவாப்பழம் சாப்பிலாம். காலையில் மாலையில் தவறாமல் வாக்கிங் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment