Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 19, 2025

மாதம் ரூ.10,000 ஊக்கத் தொகையுடன் சி.ஏ., படிக்கலாம்


சி.ஏ., படிப்பை பார்த்து, மாணவர்கள் சிலர் பின்வாங்குகின்றனர். முதலில் மாணவர்கள் உங்களின் விருப்பத்தை தேர்வு செய்து, அதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வணிகம் செய்வதில், ஆர்வம் இருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் என, எந்த பிரிவுகளில் நீங்கள் படித்திருந்தாலும், சி.ஏ., படிக்கலாம்.

பத்தாம் வகுப்பு படித்த பின், இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேணடும். டில்லியை தலைமையாக கொண்டு, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுன்ட்ஸ் ஆப் இந்தியா செயல்படுகிறது. பிளஸ் 2 படித்த பின், பவுண்டேஷன் எனப்படும் நுழைவு தேர்வு எழுத வேண்டும். மொத்தமுள்ள நான்கு தாளில், தலா 50 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும்.

இதையடுத்து, இன்டர்மீடியேட் தேர்வில் ஆறு தாள்களுக்கு தேர்வு நடக்கும். இதில் தேர்ச்சி பெற்ற பின், இரண்டு ஆண்டுகளுக்கு, பட்டய கணக்காளரிடம் தொழில் பயிற்சி எடுக்க வேண்டும். கணக்கை பார்ப்பது, வரி விதிப்பு, பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அது சார்ந்துள்ள புதிய தொழில்நுட்பம் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த காலத்தில், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம், 10,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். சி.ஏ., இறுதி தேர்வில் தேர்வு பெற்ற உடனே, பணிக்கு செல்ல முடியும். சி.ஏ., படிப்பு முடிக்க, மொத்தம், 75,000 ரூபாய் வரை தான் செலவாகும்.

தணிக்கையாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. பணிக்கு சேரும்போது, முதல் மாதத்திலேயே, 60,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

- ஆடிட்டர் ராஜேந்திரகுமார், இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுன்ட்ஸ் ஆப் இந்தியாவின் மத்திய குழு உறுப்பினர்

No comments:

Post a Comment