Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 20, 2025

ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வரும் மே மாதம் ?


2024-2025 ஆம் கல்வி ஆண்டு நிறைவு பெறும் நிலையில்...

இந்த ஆண்டுக்கு ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு வரும் மே மாதம் நடைபெறும் என தெரிகிறது.

ஒவ்வொரு ஆசிரியரும் EMIS இல் தங்களின் சுய விவரங்கள் அனைத்தும் மிக சரியாக இருப்பதை உறுதி செய்திடுங்கள்!! பிறந்ததேதி, முதன்முதலில் பணியில் சேர்ந்த தேதி, பதவி உயர்வு பெற்ற தேதி, தற்போது பணிபுரியும் ஒன்றியம் மற்றும் தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியில் சேர்ந்த தேதி, பணிவரன்முறை மற்றும் தகுதிகாண் பருவம் முடித்த தேதி, தற்போது வகிக்கும் பதவி ஆகியவை மிக சரியாக இருப்பதை சரி பாருங்கள்.

2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்து 01-06-2006 இல் நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு சென்ற ஆண்டு நடைபெற்ற கலந்தாய்வில் முதன்முதலில் பணியில் சேர்ந்த தேதி கணக்கில் எடுத்து கொண்ட காரணத்தால் அந்த தேதி சரியாக உள்ளதை சரி பார்த்து கொள்ளுங்கள். வேறு தகவல் இருப்பின் தொடர்ந்து வரும். நன்றி.

No comments:

Post a Comment