Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 30, 2025

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் கர்னாடக இசை உயர் டிப்ளமோ படிப்பு: ஜூன் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
கர்னாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாடமி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மியூசிக் அகாடமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை மியூசிக் அகாடமியின் அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆப் கர்னாடிக் மியூசிக் பள்ளியில் கர்னாடக இசையில் அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பில் 2025-26-ம் கல்வி ஆண்டில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 3 ஆண்டு காலம் கொண்ட இந்த உயர் டிப்ளமோ படிப்பு ஆண்டுக்கு 2 செமஸ்டர்களை (ஜுலை-நவம்பர் மற்றும் ஜனவரி-ஏப்ரல்) கொண்டது. வகுப்புகள் ஜூலை மாதம் தொடங்கும். வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இசை வகுப்புகள் நடைபெறும்.

இந்த படிப்பில், பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். வயது 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வர்ணம், கீர்த்தனை பாடத் தெரிந்திருக்க வேண்டும். அதோடு மனோதர்ம சங்கீத அறிவும் அவசியம். இதில் சேர விரும்புவோர் விண்ணப்ப படிவத்தை மியூசிக் அகாடமியின் இணையதளத்தில் இருந்து (www.musicacademymadras.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தையும், ஏற்கெனவே பெற்ற இசைப் பயிற்சி தொடர்பான தகவல்களையும், சுய-விவரத்தையும் ஜூன் 25-ம் தேதிக்குள் மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய சென்னை மியூசிக் அகாடமியின் இணையதள முகவரி அல்லது 044-28112231, 28115162, 28116902 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை மியூசிக் அகாடமியால் 2010-ம் ஆண்டு நிறுவப்பட்ட அட்வான்ஸ்டு ஸ்கூல் ஆஃப் கர்னாடிக் மியூசிக் பள்ளி, இசையில் சிறந்து விளங்க, மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இசை வல்லுநர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது, மாணவர்களுக்கு மேடை கச்சேரிகள் புரிவதற்கான தன்னம்பிக்கையை அளிக்கிறது. மூன்றாண்டு பயிற்சியின் நிறைவில், மாணவர்கள் கற்றுக் கொண்ட பாடல்கள், நிரவல் போன்றவற்றில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதும் விதமாக, ரசிகர்கள் முன்னிலையில் இசைக் கச்சேரி வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News