Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 2, 2025

பூண்டு மிளகு குழம்பு செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்.....

1 கப் பூண்டு

1/2 கப் வெங்காயம்

3 டீஸ்பூன் மிளகு

1 டீஸ்பூன் மல்லி

3 காய்ந்த மிளகாய்

1 டீஸ்பூன் சாம்பார் பொடி

1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்

1 டீஸ்பூன் கருவேப்பிலை

1டீஸ்பூன் சீரகம்

1டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு

1/2 கப் புளி கரைசல்

5 டீஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை.


கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர் வெங்காயம் சேர்த்து கிளறவும்.....

வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து கிளறவும்.மற்றொரு கடாயில் மிளகு, சீரகம், மல்லி காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்......

வறுத்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.தக்காளி வதங்கியதும் இந்த மசாலா சேர்த்து.இதனுடன் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்.....

தேவையான அளவு புளி கரைசல் சேர்த்து கொள்ளவும்.கெட்டி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.சுவையான கருமிளகு பூண்டு கிரேவி தயார்......






#திண்டு

No comments:

Post a Comment