
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர நீட் நுழைவுத் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த வகையில் வருகிற கல்வியாண்டில் இளநிலை மருத்துவ படிப்பில் சேர விரும்புபவர்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்றது. தேர்வர்களின் வசதிக்காக தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூன் 2ம் தேதி நீதிமன்றத்தில் வரவுள்ளது. இதனால் நீட் தேர்வு முடிவுகள் எப்போது வெளிவரும்? என தேர்வர்கள் பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். தேசிய தேர்வு முகமையின் முன்மொழியப்பட்ட அட்டவணையின்படி, நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 14 ஆம் தேதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜூன் மூன்றாவது வாரத்தில் முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:
Post a Comment