Join THAMIZHKADAL WhatsApp Groups

மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதில் சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரும் துணை முதல்வர்களாக உள்ளனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் புதிய கல்விக் கொள்கையை பாஜக கூட்டணி அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. அதாவது, தேசிய கல்விக்கொள்கை 2020இன்படி மகராஷ்டிர பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் இந்தி அல்லது வேறோரு இந்திய மொழி மூன்றாம் மொழிப்பாடமாக கற்பிக்கப்படும் என்று மகராஷ்டிர பாஜக அரசு அறிவித்தது. இதன்மூலம் மராத்தி, ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கைபடி, அனைத்து ஆசிரியர்களும் பயிற்றுவிக்கப்படுவார்கள் என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது.
இதற்கு எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அம்மாநில நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வித் துறை அமைச்சர் தாதா புசே, பள்ளிகளில் மூன்றாம் மொழி கற்பிக்கும் திட்டம் இப்போதைக்கு கைவிடப்படுவதாகவும் மராத்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளை கற்பிக்கும் நடைமுறை தொடரும் என்றும் கூறியுள்ளார். மூன்றாம் மொழி கற்பிப்பதை ஒன்றாம் வகுப்புக்கு பதிலாக மூன்றாம் வகுப்பிலிருந்து தொடங்கலாம் என்று பெற்றோர் சிலர் பரிந்துரைத்திருப்பதாகவும் இது குறித்து அரசு பரிசீலித்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment