Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 7, 2025

இடைநிலை ஆசிரியர் தேர்வு விண்ணப்பத்தில் திருத்த மீண்டும் வாய்ப்பு


இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தம் செய்துகொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது.

இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் எஸ்.ஜெயந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 2024-ம் ஆண்டுக்கான இடைநிலை ஆசிரியர் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் ஏப்ரல் 30-ம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது தவறான விவரங்களை குறிப்பிட்டதாகவும், தற்போது அதை சரிசெய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்குமாறு சில தேர்வர்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களில் யாரேனும் ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் தவறான விவரங்களை அளித்திருந்தால் அதை சரிசெய்வதற்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. திருத்தம் கோருவதற்கான கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை ஆதார சான்றிதழ்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குறைதீர் மின்னஞ்சலுக்கு (trbgrievances@tn.gov.in) மே 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும். மேலும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் செயல்படும் குறைதீர் பிரிவிலும் நேரடியாகவும் மேற்குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கலாம். மே 8-ம் தேதி மாலை 5 மணிக்கு பிறகு பெறப்படும் கோரிக்கை மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஏற்கெனவே கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள தகவல்கள் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment