Join THAMIZHKADAL WhatsApp Groups

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டுக்கான கைப்பிரதி பாடநூல்கள் வழங்க பள்ளிக்கல்வித் அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை: சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகளுக்கான பாடக் கருத்துகளை ஆழந்து படிப்பதற்கும், அதற்குரிய கற்றல் கற்பித்தல் துணை கருவிகளை உருவாக்கும் வகையிலும் வரும் கல்வியாண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டுக்காக கைப்பிரதி பாடநூல்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார்.
இதை செயல்படுத்தும் வகையில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு வகுப்பறை பயன்பாட்டுக்கான கைப்பிரதி பாடநூல்கள் வழங்க அனுமதி அளித்து ஆணை பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment