Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 22, 2025

அரசுப் பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை: அமைச்சர் பாராட்டு


காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சி அரசுப்பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை பற்றி...

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் ஒன்றியம் திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும்பொருட்டு நவீன முறையில் இந்த க்யூஆர் கோடு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக பள்ளியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில்,

"மாணவர் சேர்க்கை விண்ணப்பம்

வீட்டில் இருந்தே உங்கள் குழந்தைகளை நம்ம திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்திடுங்க..

அதற்கு க்யூ ஆர் கோடு ஸ்கேன் பண்ணுங்க; நம்ம ஸ்கூல்ல சேருங்க" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த பேனரைப் பகிர்ந்து 'சூப்பர்' எனப் பாராட்டியுள்ளார்.

No comments:

Post a Comment