Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 17, 2025

வாய்ப்புகளை வாரி வழங்கும் வணிகவியல் படிப்புகள் - ஒரு விரைவுப் பார்வை

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளி மேல்நிலை வகுப்புகளில் வணிகவியல் பிரிவை தேர்வு செய்த மாணவ, மாணவிகளுக்கு இளநிலை பட்டப் படிப்புகளில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. வணிகவியல் படிப்பை கல்வி நிறுவனங்களில் நேரடியாகவும், தொலை நிலை படிப்பாகவும் படிக்கலாம். பிகாம் பட்டம் பெற்றவர்கள் வங்கி, வணிக வளாகங்கள் ஆகிய இடங்களில் வேலை வாய்ப்புகளை பெற முடியும்.

சி.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ போன்ற படிப்புகளையும் தொடரலாம். பி.பி.ஏ படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பட்டதாரிகள், முதுநிலையில் எம்.பி.ஏ படிப்பை தொடரலாம். இதன் மூலம் சொந்த தொழில் துவங்குவதுடன், முன்னணி நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பையும் பெறலாம். அதேபோல் பி.ஏ எக்னாமிக்ஸ். திறன்களை வளர்த்துக் கொள்பவர்கள் பொருளாதார நிபுணராகவும் வலம் வரலாம்.

சார்டட் அக்கவுண்ட் (சி.ஏ) படிப்பு படிக்க பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சி.ஏ படிப்பின் நிலை 1-ல் சேரலாம். பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்கள் சிஏ நிலை 2-ல் நேரடியாக சேர முடியும். சிஏ படிப்பை நிறைவு செய்பவர்களுக்கு அரசு நிறுவனங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் என பல்வேறு வணிகம் தொடர்பான வேலை வாய்ப்புகள் மற்றும் சுய தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

சி.எம்.ஏ எனப்படும் காஸ்ட் அன்ட் மேனேஜ்மென்ட் அக்கவுன்டசி படிப்பு 4 ஆண்டுகள் கொண்டது. இளநிலைப் பட்டம் முடித்தவர்கள் நேரடியாக 2ம் நிலையில் சேரலாம். பொருளாதார ஆலோசகர், நிதி கட்டுப்பாட்டாளர், செலவு கட்டுப்பாட்டாளர், கணக்காளர் உள்ளிட்ட ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.

கம்பெனி செக்ரட்டரி படிப்புக்கு பிளஸ் 2 முடித்திருப்பது அவசியம். 3 ஆண்டு படிப்பு ஆகும். கார்ப்பரேட் பிளானர், ஆலோசகர், ஸ்ட்ராடிஜிக் பிளானர் என பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது.

இவை தவிர சி.எப்.ஏ, ஏ.சி.சி.ஏ, சி.பி.ஏ, சி.ஐ.ஏ போன்ற பல்வேறு வகையான வாய்ப்புகள் வணிகவியல் துறை சார்ந்த மாணவர்களுக்கு உள்ளன. வெளிநாடுகளிலும் வணிகவியல் படிப்புகள் இன்றைக்கு கொடி கட்டிப் பறப்பதால், இங்கிருந்து சென்று பலர் அங்கும் பலர் படிக்கிறார்கள்!

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News