Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 14, 2025

ஆசிரியர் பதவி உயர்வுக்கு பின் கலந்தாய்வு நடத்த கோரிக்கை


பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பின் பணிநிரவல், பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தேனி மாவட்ட தலைவர் மோகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிறைவடைந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் கலந்தாய்வு நடத்த தேவையில்லை. மேலும் 2011 செப்.,27 க்கு முன் பணியமர்த்தப்பட்ட பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் பழைய முறையில் பதவி உயர்வு வழங்கலாம் என்ற நிலை ஏற்பட்டால் அதிக காலிப்பணியிடங்கள் ஏற்படும்.

அதனால் பணிநிரவல், கலந்தாய்வினை உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பின் நடத்த வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment