Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 3, 2025

ரத்தத்தில் சர்க்கரை வேகமாக சேர்வதை தடுக்கும்… சோற்றில் இந்த பொடி சேர்த்து சாப்பிடுங்க - டாக்டர் சிவராமன்


சமையலுக்கு உதவும் கருவேப்பிலையை தினமும் ஒரு கைப்பிடி அளவிற்கு மென்று சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்ப்போம். மேலும் கறிவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக டாக்டர் சிவராமன் கூறுகிறார்.

உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்னவெல்லாம் அற்புதங்கள் நடக்கும் தெரியுமா? கருவேப்பிலையில் நன்மைகள் குறித்து டாக்டர் சிவராமன் ஹெல்தி தமிழ்நாடு யூடியூப் பக்கத்தில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.

கறிவேப்பிலைக்கு என தனி மனம் இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இவை சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் பயன்படுகிறது. பெரும்பாலும் சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அதன் தாக்கத்தால் இணை நோய்கள் ஏற்படக் கூடும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இணை நோயாக இரத்த கொழுப்பு அதிகமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. கறிவேப்பிலை கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிப்பதால் இதனை மருந்தாக பயன்படுத்தலாம் என சிவராமன் பரிந்துரைத்துள்ளார்.

அவர்கள் தினசரி கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டால், சர்க்கரை அளவு அதிகரிப்பது கட்டுப்படுத்தப்படும். ஆனால், நாம் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் எடுத்துக் கொள்ளும் மருந்துகளை ஒரு போதும் கைவிட்டுவிடக் கூடாது. அவற்றுடன் சேர்த்து தான் உணவு மூலமாக மருத்துவத்தை தேட வேண்டும் என சிவராமன் கூறுகிறார்.

கறிவேப்பிலையில் இரும்புச் சத்தும் காணப்படுகிறது. இவற்றை தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். கறிவேப்பிலையை பயன்படுத்தும் போது அவை ஃப்ரெஷ்ஷாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும். அப்போது மட்டுமே அவற்றின் முழுமையான சத்துகளை பெற முடியும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இவ்வளவு சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை பொடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

கறிவேப்பிலை,
உருட்டு உளுந்து,
கடலை பருப்பு,
கொத்தமல்லி,
மிளகு,
சீரகம்,
வரமிளகாய்,
பெருங்காயத்தூள் மற்றும்
உப்பு


செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில், தேவையான அளவு கறிவேப்பிலைகளை போட்டு வறுத்து தனியாக எடுக்கவும். பின்னர் அதே பாத்திரத்தில் ஒரு டேபிள் ஸ்பூன் உருட்டு உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி, மிளகு, சீரகம் மற்றும் வரமிளகாய்கள் சேர்த்து வறுக்க வேண்டும்.

இதையடுத்து, இவற்றுடன் சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்க வேண்டும். இவை நன்றாக பொடியானதும் சிறிதளவு உப்பு மற்றும் முதலில் வறுத்து வைத்திருந்த கறிவேப்பிலை சேர்த்து மீண்டும் பொடியாக அரைக்க வேண்டும். இப்படி செய்தால் சுவையான கறிவேப்பிலை பொடி தயாராகி விடும். இதனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

No comments:

Post a Comment