Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 28, 2025

SPD அவர்களின் தலைமையில் நடைபெற்ற நேற்றைய இணைய வழி கூட்டத்தில் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மூலம் பெறப்பட்ட அறிவுரைகள் விவரம்.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
SPD அவர்களின் தலைமையில் நடைபெற்ற நேற்றைய இணைய வழி கூட்டத்தில் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் மூலம் பெறப்பட்ட அறிவுரைகள் விவரம்.

*மாநில அடைவுத் திறன் தேர்வில் மாநிலத்தின் மொத்த நிலை குறித்து பகுப்பாய்வு (ANALYSIS) செய்யப்பட்டது.*

1. ஒவ்வொரு ஆண்டும் மாநில அடைப்பு திறன் தேர்வு நடப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2. நடுநிலைப் பள்ளிகளில் உள்ள HITECH-LAB மூலம் மாணவர்களின் கற்றல் திறன் அறியப்படும்.

3. மாநில அடைவுத்திறன் தேர்வு மதிப்பெண்கள் மாநில, மாவட்ட, கல்வி மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவில் எமிஸ் இணையதளத்தில் 27.5.25 அன்று வெளியிடப்படும் .

4. மாநில அடைவுத்திறன் தேர்வின் விபரங்களை அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பள்ளியளவில் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும்,

ஒன்றிய அளவில் வட்டார கல்வி அலுவலர்களும் முழு அளவில் தங்களது ஒன்றியத்தின் நிலையை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

5. தங்கள் பள்ளி மற்றும் ஒன்றியத்தின் நிலையை அறிந்து கொண்ட பின்னர் வரும் கல்வியாண்டில் இதனை மேம்படுத்துவதற்கான செயல் திட்டத்தினை (action plan) ஒன்றிய அளவில் தயார் செய்ய வேண்டும், இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவிலும் தயார் செய்து ஜூன் முதல் வாரத்தில் நடைபெறக்கூடிய கூட்டத்தில் சமர்ப்பித்து விளக்க வேண்டும்.

6 மாநில அடைவுத்திறன் விபரங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து ஒவ்வொரு மாதமும் மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறக்கூடிய கூட்டத்தில் முதல் தலைப்பாக இதன் முன்னேற்ற விபரத்தை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் மூலமாக ஆய்வு செய்ய வேண்டும்.

7. ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர் அறையில் மாநில அடைவுத் திறன் சார்பான பள்ளி செயல்பாட்டின் (Report card) நகல் காட்சிப்படுத்தப்பட வேண்டும், ஆய்வு அலுவலர்கள் பள்ளி பார்வையின் போது இதனை உறுதிப்படுத்தி அதன் முன்னேற்றத்தினை உறுதி செய்ய வேண்டும்.

8. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வு அலுவலர்கள் ஆகியோர் கற்றல் விளைவுகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

9. 6-8 வகுப்பு மாணவர்களின் கற்றல் அடைவை மேம்படுத்துவதற்காக THIRAN ( Targeted Help for IMPROVING REMEDIATION & ACADEMIC NURTURING ) திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. ஆசிரியர்களுக்கு கையேடுகள் மற்றும் மாணவர்களுக்கு கட்டகங்கள் வழங்கப்பட உள்ளது.

10. மேலும்THIRAN திட்டம் முழு அளவில் செயல்படுத்த மாவட்ட அளவில் பதினைந்து பேர் கொண்ட குழு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News