Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 28, 2025

TANUVAS 2025: கால்நடை மருத்துவ படிப்பு; எந்த கட் ஆஃப் வரை சீட் கிடைக்கும்?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழக கால்நடை மருத்துவ கல்லூரிகளில் பி.வி.எஸ்.சி மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு கட் ஆஃப் எப்படி இருந்தது? இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆப் என்ன? முழு விபரம் இங்கே

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள உள்ள நிலையில், பி.வி.எஸ்.சி மற்றும் பி.டெக் படிப்புகளுக்கு இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன? கடந்த ஆண்டு கட் ஆஃப் என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கு அடுத்தப்படியாக அதிகம் விரும்பப்படுவது பி.வி.எஸ்.சி (B.V.Sc & AH) எனப்படும் கால்நடை மருத்துவ படிப்பு தான். எம்.பி.பி.எஸ் படிப்புக்கு நீட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்ற நிலையில், பி.வி.எஸ்.சி படிப்புக்கு 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே சேர்க்கை நடைபெறும். இதனால் இந்த படிப்பில் சேர, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள் விரும்புவார்கள்.

மேலும், அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவராகும் வாய்ப்பு மற்றும் தனியார் துறையிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதால், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்த படிப்பில் சேர போட்டியிடுவர். இந்தப் படிப்புக்கு இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அடுத்ததாக பி.டெக் படிப்புகளும் இந்த கல்லூரிகளில் உள்ளன. பி.டெக் படிப்புக்கு கணிதம் படித்திருக்க வேண்டும்.

இந்தநிலையில், இந்த கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் என்ன? கடந்த ஆண்டு கட் ஆஃப் என்ன? என்பது விவேக் மேத்ஸ் அண்ட் சயின்ஸ் என்ற யூடியூப் சேனலில் விளக்கப்பட்டுள்ளது.பி.வி.எஸ்.சி 2024 கட் ஆஃப் நிலவரம்

பொதுப் பிரிவு – 196.50

பி.சி – 195

பி.சி.எம் – 188.50

எம்.பி.சி – 195.50

எஸ்.சி – 193

எஸ்.சி.ஏ – 189.50

எஸ்.டி – 189

பி.வி.எஸ்.சி 2025 எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்

பொதுப் பிரிவு – 197.50

பி.சி – 194.50

பி.சி.எம் – 192

எம்.பி.சி – 194

எஸ்.சி – 191.50

எஸ்.சி.ஏ – 186

எஸ்.டி – 188.50

பி.வி.எஸ்.சி வொக்கேஷ்னல் 2024 கட் ஆஃப் நிலவரம்

பி.சி – 188.50

பி.சி.எம் – 177

எம்.பி.சி – 187.50

எஸ்.சி – 185.50

எஸ்.சி.ஏ – 169.50

பி.வி.எஸ்.சி வொக்கேஷ்னல் 2025 எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்

பொதுப் பிரிவு – 193

பி.சி – 185.50

பி.சி.எம் – 165

எம்.பி.சி – 185

எஸ்.சி – 169

எஸ்.சி.ஏ – 190

பி.டெக் உணவு தொழில்நுட்பம் 2024 கட் ஆஃப் நிலவரம்

பி.சி – 178

பி.சி.எம் – 179

எம்.பி.சி – 182.50

எஸ்.சி – 171

எஸ்.சி.ஏ – 184.50

பி.டெக் உணவு தொழில்நுட்பம் 2025 எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்

பி.சி – 162.50

பி.சி.எம் – 158.50

எம்.பி.சி – 133

எஸ்.சி – 165.50

பி.டெக் கோழி வளர்ப்பு 2024 கட் ஆஃப் நிலவரம்

பி.சி – 156

எம்.பி.சி – 151.50

எஸ்.சி – 119

எஸ்.சி.ஏ – 110

எஸ்.டி – 106.50

பி.டெக் கோழி வளர்ப்பு 2025 எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்

பி.சி – 141.50

எம்.பி.சி – 120

எஸ்.சி – 96

எஸ்.சி.ஏ – 155.50

பி.டெக் பால் தொழில்நுட்பம் 2024 கட் ஆஃப் நிலவரம்

பி.சி – 171.50

எம்.பி.சி – 183.50

எஸ்.சி – 169

எஸ்.சி.ஏ – 177.50

பி.டெக் பால் தொழில்நுட்பம் 2025 எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப்

பி.சி – 169.50

பி.சி.எம் – 176.50

எம்.பி.சி – 170

எஸ்.சி – 157.50

எஸ்.சி.ஏ – 140.50

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News