Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 4, 2025

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தள்ளிவைப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நாடுமுழுவதும் எம்​டி, எம்​எஸ், முது​நிலை டிப்​ளாமோ படிப்​பு​களுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்​கைக்​கான ஜூன் 15-ம் தேதி நடை​பெற இருந்த நீட் தேர்​வுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பிப்​பது கடந்த ஏப். 13-ம் தேதி தொடங்கி கடந்த மே 7-ம் தேதி நிறைவடைந்​தது. தமிழகத்​தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு​முழு​வதும் 2.30 லட்​சத்​துக்​கும் மேற்​பட்டோர் விண்​ணப்​பித்​தனர்.

தமிழகத்​தில் சென்​னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், திருச்​சி, மதுரை, கோவை, திருப்​பூர் என 17 இடங்​கள் உட்பட நாடு​முழு​வதும் 179 நகரங்​களில் ஜூன் 15-ம் தேதி இரு கட்​டங்​களாக நீட் தேர்வு நடை​பெறும். இருதரப்​பினருக்​கும் மாறு​பட்ட வினாத்​தாள்​கள் வழங்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இதற்​கிடை​யில், நீட் தேர்வை ஒரே ஷிப்​டில் நடத்த உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், நேற்று தேசிய மருத்​துவ அறி​வியல் தேர்​வு​கள் வாரி​யம் வெளி​யிட்ட அறி​விப்​பில், “உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்படி முது​நிலை மருத்​துவ படிப்​பு​களுக்கான நீட் தேர்வு ஒரே ஷிப்​டில் நடத்தப்​படும். இதற்​காக கூடு​தல் தேர்வு மையங்​கள், தேவை​யான உட்​கட்​டமைப்பு வசதி​களை ஏற்​படுத்த வேண்​டி​யுள்​ள​தால், ஜூன் 15-ம் தேதி நடை​பெற இருந்த தேர்வு தள்​ளிவைக்​கப்​படு​கிறது. நீட் தேர்வு நடை​பெறும் தேதி விரை​வில் அறிவிக்​கப்​படும்​” என்​று தெரி​வித்​துள்​ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News