Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, December 31, 2025

அஜீரண கோளாறு உள்ளவர்கள் வாழைப்பூவை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?


பொதுவாக வாழைப்பூ நம் உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகிறது .அந்த பூ ஆண்களை விட பெண்களுக்கு பல நோய்களை குணப்படுத்தும் .

மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு அதிக இரத்த போக்கு ஏற்படலாம். வாழைப்பூவில் உள்ள மருத்துவ குணங்கள் பெண்களின் இந்த பிரச்சனைகளை போக்க கூடியது. இந்த வாழைப்பூவின் மற்ற நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

1.பொதுவாக வாழைப்பூவை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

2.வாழைப்பூவில் உள்ள நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும், ரத்த சோகையும் நீங்கும்.

3.சிலருக்கு மூலநோய் இருக்கும் ,இந்த நோய் உள்ளவர்கள் வாழைப்பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த மூலம் விரைவாக குணமாகும்.

4.மேலும் வாழைப்பூ ரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டது,

5.இந்த வாழை பூ ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைப்பத்தோடு உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்து நம் ஆரோக்கியம் காக்கும்

6.சிலருக்கு அஜீரண கோளாறு இருக்கும் .இதன் காரணமாக ஏற்படும் வயிற்று கடுப்பு போன்ற பிரச்சனைகளூக்கு வாழைப்பூ பயன் தரும்,

7.அஜீரண கோளாறு உள்ளவர்கள் வாழைப்பூவை நறுக்கி சுத்தம் செய்து தண்ணீரில் வேகவைத்து அதனுடன் மிளகு மற்றும் சீரகத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபின் அந்த தண்ணீரை வடிகட்டி குடித்து வந்தால் அஜீரணம் நீங்கும்.

8.அதிக வெப்பம் காரணமாக ஏற்படும் உடல் சூடு குறைய வாழைப்பூவை சிறிது நெய் சேர்த்து வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

9.சீரற்ற உணவுமுறை , மனஅழுத்தம் மற்றும் வயிற்றினுள் ஏற்படும் அதிக அமிலத்தன்மை காரணமாக ஏற்படும் வயிற்று புண்கள் ஆற வாழைப்பூவை சேர்த்து கொள்ளலாம்

10.மேலும் கர்பப்பபை பிரச்சனை, வெள்ளைபடுதல் போன்ற பிரச்சனை உள்ள பெண்கள் வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொள்ள அந்த நோய்கள் குணமாகும் .

No comments:

Post a Comment