தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் (MRB) செவிலியர் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மொத்தம் 999 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.02.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Nursing Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 999
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Nursing Assistant Course படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 15,700 - 58,100
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு 01.07.2026 அன்று 34 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.டி (ST), எஸ்.சி.ஏ (SCA), எஸ்.சி (SC), எம்.பி.சி (MBC&DNC), பி.சி.எம் (BCM), பி.சி (BC) பிரிவினர் 59 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு, மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 40%க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 60%க்கும் கணக்கிடப்படும். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.mrb.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 300
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.02.2026




No comments:
Post a Comment