Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 2, 2026

சங்கங்களுடன் இன்று நடைபெறுவது சந்திப்பும் செய்தி தெரிவித்தலும் மட்டுமே -


சங்கங்களுடன் இன்று நடைபெறுவது சந்திப்பும் செய்தி தெரிவித்தலும் மட்டுமே -

மாண்புமிகு அமைச்சர் உயர்திரு.ஏ.வ.வேலு அவர்களுடன் ADAF கூட்டமைப்பினர் இல்லத்தில் சந்திப்பு - சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அல்ல சந்திப்பும் செய்தி தெரிவித்தல் என்ற திட்டம் எனவும் 11 மணிக்கு தலைமை செயலகத்தில் மேற்கொள்கிறோம் - ADAF அச்சந்திப்புக்கு வாருங்கள் என கூட்டமைப்பு நேரில் அழைப்பு

தோழர்களுக்கு வணக்கம்

இன்று நம் ADAF கூட்டமைப்பின் மாநில முதன்மை கள அமைப்பாளர்கள் மற்றும் மாநில கள அமைப்பாளர்கள் காலை 9.30 மணி அளவில் மாண்புமிகு அமைச்சர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

அரசு பேச்சுவார்த்தை என்பது வேலை நிறுத்தம் அறிவித்துள்ள அனைத்து அமைப்புகளையும் அழைத்து மேற்கொள்ளப்படுவதை கடைபிடிக்கவில்லை என தெரிவித்தோம். அதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தை என்பது திட்டமில்லை மாண்புமிகு முதல்வர் அவர்களால் அறிவிப்பு வெளியிடப்படும் நிலை உள்ளது அடுத்தும் தொடர்ந்து அறிவிப்பு வெளியிடுகிறார் அதை கருத்தில் கொண்டு தங்கள் போராட்டங்களின் மீது மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற செய்தி அரசு சார்பில் தெரிவிக்க உள்ளோம் எனவும்.

ADAF கூட்டமைப்பை தலைமை்செயலகம் வந்து சந்திப்பில் பங்கேற்கவும் என நேரில் அழைப்பு விடுத்தார். அழைப்பை தொடர்ந்து செல்கிறோம்.

பங்கேற்று விரிவான செய்தி வெளியிடப்படும்.

🙏🏻

தோழமையுடன்




மாநில முதன்மை கள அமைப்பாளர்கள்

ADAF

No comments:

Post a Comment