Breaking

Wednesday, January 21, 2026

நார்த்தங்காய் பயன்கள்:


#காய்ச்சல்:

நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்க காய்ச்சல் சரியாகும்.

#உடலில் ஏற்படும் நோய்கள் குறைய:

உடலில் நோய்கள் குறைய அவரைக்காய், நார்த்தங்காய் ஊறுகாய் ஆகியவைகளை உணவில் தினமும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும்.

#பித்தம் குறைய:

நாரத்தங்காய் இலை,நல்லெண்ணெய், வெள்ளை உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் மிளகாய், உப்பு, புளி, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும்.

#மலச்சிக்கல் தீர:

நார்த்தங்காயிக்கு ஜீரணிக்கும் சக்தி அதிகம்.இதனை ஊறுகாய் செய்தும் சாப்பிடலாம் இது மலச்சிக்கலை போக்கும் தன்மை உடையது.

#வாந்தி குறைய:

நார்த்தங்காய் இலையை உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அடிக்கடி ஏற்படும் வாந்தி குறையும்.

#ஜீரண சக்தி அதிகரிக்க:

நார்த்தங்காயை ஊறுகாய் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலைப் போக்கி ஜீரண சக்தியை அதிகரிக்கும்

#வாய் துர்நாற்றம்:

நார்த்தம் பழத்தோலை மென்று 10 நிமிடங்கள் வைத்திருந்து துப்பி விட வாய் துர்நாற்றம் அகலும்.

No comments:

Post a Comment