Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 6, 2026

TRB Asst-Prof Tentative key Published


ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.04/2025, நாள் 16.10.2025- ன் படி 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப்பேராசிரியர் தேர்வு 27.12.2025 அன்று நடைபெற்றது.

மேலும், காலையில் நடைப்பெற்ற OMR தேர்வுக்கான (Part A and Part B of Paper-I) 2 குறிப்புகள் மீதான ஆட்சேபணைகள் தெரிவிக்க Objection Tracker URL (https://trbtucanapply.com) வெளியிடப்படுகிறது. உத்தேச விடைக் குறிப்புகளின் மீது ஆட்சேபணைகள் தெரிவிக்க விரும்பும் தேர்வர்கள் 05.01.2026 முதல் 13.01.2026 பிற்பகல் 5.30 மணி வரை உரிய ஆட்சேபணையினை பதிவு செய்திடல் வேண்டும்.

ஆட்சேபணைகள் தெரிவிக்கப்படும் விடைக் குறிப்புகளுக்கான சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏற்கப்படமாட்டாது. தபால் அல்லது பிறவழி முறையீடுகள் அவை நிராகரிக்கப்பட்டதாகக் கருதப்படும். அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் (Standard Text Books) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும். கையேடுகள் (Guides, Notes) ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது எனவும் அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment