Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 27, 2014

என்பாதி ஆனவளே




என்பாதி ஆனவளே

தேரோட்டம் காணுகின்ற பக்தர்க்கூட் டம்போல
ஊரிலுள்ள கண்களெல்லாம் என்மேல தான்விழுது
விரும்புகின்ற பூக்கண்டால் பறித்துசூடும் பெண்களைப்போல்
பிறர்கவர்ந்து விடுவாரோ பயம்எனக்கு வந்தது
உன்நினைவைச் சுமந்துகொண்டு உனக்காக வாழ்கின்றேன்
மண்ணோடு போனாலும் மனம்மாற மாட்டேனே



ரெட்டசடை பின்னலைமுன் னேவிட்டு நடக்கையிலே
மொட்டுவிட்ட மல்லிகையைத் தொட்டுதொட்டு பார்க்குதடி

காதோரம் அசைந்தாடும் காதணியாம் லோலாக்கும்
இதமாகக் கண்ணத்தில் முத்தமிட்டுப் போகுதடி

என்கையில் உறைகின்ற சிறுதுணியும் இரக்கமின்றி
என்முன்னே இதழ்உறசி முத்துமிட்டு வாழுதடி

கண்மணியே
கொண்டவன்நான் உனைத்தொட வழியின்றி தவிக்கிறேன்
அன்னியர்கள் உனைத்தொட்டு இன்பங்கள் காணுகின்றார்
நான்இன்பம் காண்பது எந்நாளோ?
என்பாதி ஆனவளே பதிலொன்று சொல்லாயோ?