Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 27, 2014

உண்ணும்சோறு அத்தனையும் நீ


உண்ணும்சோறு அத்தனையும் நீ

சின்னசின்ன புன்னகையில் நெஞ்சைஅள்ளிப் போனவளே
வண்ணவண்ணப் பூச்சரமே சொக்கவெள்ளிப் பாற்குடமே
உண்ணுஞ்சோ றுஅத்தனையும் நீயென்று ஆனதடி
உன்னைஅள்ளிக் கட்டிகொள்ள என்நெஞ்சு ஏங்குதடி

மனவானில் சிறகடித்துப் பறப்பதுபோல் இருக்குது
வான்மகளே நீவந்து என்னிடத்தில் பேசியதால்


இருட்டறையில் இருந்தமனம் புதுஒளியைக் கண்டது
ஒருநாறும் நான்மறவேன் எனநீயும் சொன்னதால்

வரண்டநிலம் செழிப்பதுபோல் உளம்மகிழ்ந்து துள்ளுது
ஒருசேர என்னோடு வழித்துணையாய் வந்ததால்

கண்ணடித்து கண்ணடித்து என்னைநீ பார்க்கிறாய்
கண்ணீர்விட் டநெஞ்சினிலே களிவெள்ளம் ஓடுது

நான்இருக்கும் திசைகண்டு என்னைநீ பார்க்கிறாய்
மனதுக்குள் இனம்புரியா புதுதொம்பு வந்தது

எனைப்பற்றி என்னிடத்தில் நீவந்து பேசினாய்
உன்னோடு நான்கொண்ட அன்புஇன்னும் கூடுது

கவிநிலவே

எட்டுவச்சி என்நெஞ்சில் மெல்லமெல்ல புகுந்தாய்
மொட்டரும்பி பூப்பதுபோல் என்நெஞ்சில் நிறைந்தாய்
சிட்டுஉன்னை நெஞ்சினிலே சிலையாக வடித்தேன்
விட்டுவிட்டுப் போகாதே நான்மாய்ந்து போவேன்.