Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, February 27, 2014

திருமண வாழ்த்து மடல்


வாழ்த்து மடல்

 

இரண்டுமனம் இணைந்து அன்பில் கலப்பது திருமணம்
வறண்டநிலம் புதுமழையால் செழித்திடும் தினந்தினம்
இரண்டுஇல்லம் ஒன்றாகி புதுஉறவைத் தொடர்ந்திடும்
உறவுகளில் கூட்டமைப்பில் இல்வாழ்க்கை வளர்ந்திடும்
இருவழிகள் ஒருகாட்சி ஆவதுபோல் மணமக்கள்
இருவரையும் ஒருவராக இணைத்துவைக்கும் நன்னாளில்


உறவென்று இருந்தவளை ஒருமனதாய் மனம்உவந்து
ஒருமரத்தின் கிளைஎடுத்து வேறிடத்தில் நடுவதுபோல்
பெற்றவர்கள் மணப்பெண்ணை மற்றவருக்குக் கொடுத்திடுவர்

உரிமையென்று இருந்தவளை ஒருமனதாய் மனம்உவந்து
ஓரிடத்து நாற்றெடுத்து வேறிடத்தில் நடுவதுபோல்
பெற்றவளை மணம்முடிக்க மற்றவர்க்குக் கொடுத்திடுவர்

உயிரென்று இருந்தவளை ஒருமனதாய் மனம்உவந்து
ஒருவரது உடலுறுப்பை அடுத்தவருக்கு தருவதுபோல்
பெற்றெடுத்த தன்மகளை மற்றவர்க்குக் கொடுத்திடுவர்

           மணமக்களே!

இல்லமென்ற கோவிலிலே தெய்வமென வாழ்ந்திடுவீர்
இல்லறத்து வாழ்க்கையிலே வெற்றிவாகை சூடிடுவீர்
பெற்றவரும் மற்றவரும் உற்றவரும் போற்றிடவே
பேறுபெற்று வாழ்ந்திடு  வீர்.

No comments:

Post a Comment