Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 15, 2014

உனைக் காணாமல்….


உனைக் காணாமல்….

காற்றாகி வான்நிலம் கடல்எல்லாம் தேடிவிட்டேன்
ஊற்றாகி பூமியிலும் முழுவதுமாய் பார்த்துவிட்டேன்
இருள்சூழ்ந்த இடத்தினிலும் ஒளியாகித் தேடிவிட்டேன்
உற்றவள்நீ உனைக்காண மலென்சீவன் வாடுதடி.

நீலவான் தோட்டத்தில் ஒளிவீசும் சிறுமலரே
நிலவில்லா இரவுபோல நீயின்றி நான்இருந்தேன்

வழிதேடும் ஒருவர்க்குத் துணையாகும் வழித்துணையே
நிழல்இல்லா நிலம்போல நீயின்றி நான்இருந்தேன்

பயிர்வளர்க்கும் உழமகளின் கணவான விளைநிலமே
உயிரில்லா உடம்புபோல நீயின்றி நான்இருந்தேன்

எப்போதும் 



மண்ணைபிட்டு வேர்ப்பிரிந்தால் செடிகொடிகள் வாழாது
என்னைவிட்டு நீபிரிந்தால் நான்வாழேன்
கண்ணோடு காட்சியென சேர்ந்துநாம் வாழலாமே.


                               
G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd.,
BT ASST. TEACHER IN TAMIL
GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202,
ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306.
visit: gharikrishnanrettanai.blogspot.in