Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, March 15, 2014

முகம்தேடி வருவானோ?


முகம்தேடி வருவானோ?

சும்மாஇ ருந்தசங்கை ஊதிகெடுத் தஆண்டிபோல
சும்மாஇ ருந்தஎன்னை பேச்சாலே கவர்ந்துவிட்டான்
மின்னல்போல் கவர்ந்திழுக்கும் அவன்பேச்சில் நான்மயங்கி
கண்கொள்ளைக் காரனிடம் என்மனதைப் பறிகொடுத்தேன்.

முத்தமிட்டு முத்தமிட்டு தேன்உறிஞ்சும் வண்டுபோல
முத்தமிட்டு என்மனதைக் கொள்ளையிட்டு போனானே

மலைச்சாரல் தேனெடுக்க தேன்கூடு களைவதுபோல்
விலையில்லா என்னழகை அவன்கெடுத்துப் போனானே

தினந்தோறும் எனைத்தொட்டு ஆசைகளை வளர்த்துவிட்டு
மனதார தந்தஎன்னை தவிக்கவிட்டுப் போனானே

என்னசெய்வேன்

அவனிருந்த காலத்தில் நெஞ்சிக்குள் தேரோட்டம்
அவன்மறைந்த காலத்தின் என்னுள்ளே போராட்டம்
கள்குடித்த கடுவன்போல் வெறிபிடித்துக் கிடக்கின்றேன்
முள்நின்ற எனைக்காக்க முகம்தேடி வருவானோ?

                                    
G. HARIKRISHNAN M.A., B.Ed., M.Phil.,Phd.,
BT ASST. TEACHER IN TAMIL
GOVT. GIRLS HR. SEC. SCHOOL, GINGEE - 604202,
ADD: 8, EAST ST., RETTANAI&PO., TINDIVANAM T.K. - 604 306.
visit: www.thamizhkadal.com