Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 13, 2014

சுதந்திரத்தைப் பேணுவோம்


சுதந்திரத்தைப் பேணுவோம்

சுதந்தி ரமாம்சு தந்திரம்
நமக்குக் கிடைத்த சுதந்திரம்
நாட்டு மக்கள் உழைப்பினால்
கிடைத்த திந்த சுதந்திரம்.

அன்னி யர்கள் ஆட்சியில்
அடிமை பட்ட நாட்டினை
மண்ணின் மைந்தர் யாவரும்
ஒன்று கூடி மீட்டனர்.

அண்ணல் காந்தி என்பவர்
அகிம்சை வழியில் நடத்தினார்
சந்திர போசு என்பவர்
ஆயு தங்கள் தாங்கினார்.

செக்கி ழுத்த செம்மலும்
     கப்பல் விட்டு எதிர்த்தவர்
கட்ட பொம்மன் வரியினை
     கட்ட மறுத்து விரட்டினான்

பார தியாரும் கவிதையில்
     பகைமை விரட்ட நினைத்தவர்
மருது ரெட்டை சோதரும்
     விரட்டி அடித்தார் வெள்ளையை.

பெற்ற இந்த சுதந்திரம்
பேணி நாமும் காத்திட
ஒற்று மையாய் வாழுவோம்
     நாட்டை உயர்த்திக் காட்டுவோம்.