Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 15, 2015

சர்வாங்காசனம்


சர்வாங்காசனம்

          சர்வம், அங்கம், ஆசனம் ஆகிய 3 வடமொழிச் சொற்களின் கூட்டுச் சொல்தான் சர்வாங்காசனம். சர்வம் என்றால் அனைத்து என்றும் அங்கம் என்றால் உறுப்பு என்றும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருள் வழங்கப்படுகிறது. அதாவது உடல் முழுதும் பயிற்சியில் ஈடுபடும் முறைதான் சர்வாங்கசனம்.



செய்முறை

  1. விரிப்பின் மீது கால்களை ஒன்று சேர்த்துப் படுக்கவும். கைகளை நிதானமாக உங்கள் பக்கவாட்டில் விரிப்பில் சாதரணமாக வைத்துக் கொள்ளவும். 
  2. கால்களை 90 டிகிரிக்கு உயர்த்தவும், இப்போது உள்ளங்கைகளை அழுத்தி இடுப்பை பூமியிலிருந்து உயர்த்தி கால்களை பூமியை நோக்கி முன்புறமாக கொண்டு வரவும். 
  3. கைகளை மடக்கி உள்ளங்கைகளால் இடுப்பை பிடித்து கால்களை ‌‌மீ‌ண்டு‌ம் 90 டிகிரிக்கும் உயர்த்த வேண்டும். உடம்பும் கால்களும் ஒரே நேர்க்கோட்டில் வரும்படி உடல் பளுவை தோள்பட்டைகளில் வைத்து சரி செய்ய வேண்டும். கை முட்டிகள் தரை மீது இருக்க வேண்டும். 
  4. 50 அல்லது 100 எண்ணிக்கைகள் அப்படியே ஆடாமல் இருக்க வேண்டும். கண்கள் திறந்து கால் விரல்களை பார்க்க வேண்டும். 
  5. கால்களை பூமியை நோக்கி பின்புறமாக கொண்டு வந்து முதுகிலுள்ள கையைப் பிரித்து விரிப்பின்மீது மெதுவாக முதுகை வைத்து படுத்து கால்களை விரிப்பின்மீது வைக்க வேண்டும். 

பலன்கள்

  1. இந்த ஆசனத்தால் தொண்டைப் பகுதிக்கு அதிக இரத்தம் செலுத்தப்படுவதால் தைராய்டு சுரப்பி ஒழுங்காக வேலை செய்ய ஏதுவாகிறது. இரத்த ஓட்ட மண்டலம், மூச்சு மண்டலம், ஜீரண மண்டலம், உடல் கழிவை வெளியேற்றும் மண்டலம் ஆகியவை சிறப்பாக செயல்படுகிறது. 
  2. கிட்னி கோளாறுகளை சரி செய்வதுடன் சிறுநீர் கோளாறுகளையும், இரத்தமின்மை வியாதியையும் போக்குகிறது. இரத்தத்தை சுத்தம் செய்கிறது. தோல் வியாதிகள் விரைவில் குணமாகும். காது, மூக்கு, தொண்டை கோளாறுகளை சரி செய்கிறது. 
  3. உடல் எடையை குறைக்கிறது. அதுபோல் குறைந்த உடல் எடையை போதுமான அளவு கூட்டுகிறது. முகத்தில் தோல்களில் ஏற்படும் சுருக்கங்கள், கிழத்தோற்றம், விரைப்பு ஆகியவற்றை போக்கி இளமையைக் கூட்டுகிறது. 
  4. தலைமுடி கொட்டுவதையும், இளநரையையும் போக்குகிறது அல்லது கட்டுப்படுத்துகிறது. ஆஸ்துமா மூக்கடைப்பு, மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், கல்லீரல் கோளாறுகள், குடல்வால்வு நோய், மலச்சிக்கல், குடல் இறக்கம் எனும் ஹிரணியா, சர்க்கரை வியாதி, வெரிக்கோய்வெயின் எனும் கால் நரம்பு முடிச்சு வியாதிகள், தூக்கமின்மை, குதிகால் வலி மற்றும் பாதம் சம்பந்தப்பட்ட நோய்களை விரைவில் குணம் செய்யும். 

எச்சரிக்கைகள்

  1. உயர் ரத்த அழுத்தம் உள்ள போது இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம் 
  2. கழுத்து, தோள்பட்டை, கீழ் முதுகு, இடுப்பு ஆகிய பகுதிகளில் கோளாறுகள் இருக்கும்போதும் இந்த ஆசனத்தை செய்வது நல்லதல்ல. 
  3. மாதவிடாய் தருணத்தில் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.

No comments:

Post a Comment