குழந்தைகளைப் பேணுவோம்
அன்னை தந்தை ஈன்றெடுத்த
அன்புச் செல்வம்
குழந்தைகள்
மண்ணில் வந்து
வாழுகின்ற
வெள்ளை உள்ள(ம்)
குழந்தைகள்.
குரங்கு போல பெற்றவரைப்
பற்றிக் கொண்டு
வாழுவர்
குறும்பு கோவம்
கொண்டுநம்மை
குதூஉ கலத்தில்
ஆழ்த்துவர்
வளர்ந்து வரும்
பருவத்தில்
அறிவை நாமும் ஊட்டணும்
இளமைப் பருவம்
வழிநடத்தி
இனிய கனவை வளர்க்கணும்
வறுமை எதுவும்
தெரியாமல்
வளமை யோடு இருக்கணும்
பெருமை கொள்ளும்
அளவிற்கு
பண்பு அவரைச் சூழணும்
பெற்ற வர்கள் குழந்தைகளை
பேணி நாளும் காப்பதால்
தரணி போற்றும்
நல்லவராய்
தங்கள் பிள்ளை
மாறுவர்.

