Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 19, 2018

OFFICE SECRETARY COURSE ADMISSION 2018




செக்ரட்டரி படிப்பு

நிறுவனங்கள் சட்டம், நிதி நிர்வாகம், பணியாளர் நிர்வாகம் போன்றவற்றில், சட்ட நுணுக்கங்களின் மூலம் ஒரு நிறுவனத்தை அனைத்துத் துறைகளிலும் சிறப்பாக வழிநடத்துவதே, ஒரு கம்பெனி செக்ரெட்டரியின் பிரதான கடமை.
ஐ.சி.எஸ்.ஐ.,:

பொருளாதார ரீதியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவில், கம்பெனி செக்ரெட்டரிகளின் தேவை அதிகம் என்பதால், ‘தி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா’ என்கிற கல்வி நிறுவனத்தை, கம்பெனி விவகாரத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில், மத்திய அரசே நடத்தி வருகிறது.




சென்னை, மும்பை, கொல்கத்தா மற்றும் டில்லி ஆகிய நான்கு நகரங்களில் மண்டல அலுவலகங்களும், 70 கிளை அலுவலகங்களும் இயங்கி வருகின்றன. ‘கம்பெனி செக்ரெட்ரிஷிப்’ தொடர்பான பயிற்சிகளை ஐ.சி.எஸ்.ஐ., மட்டுமே வழங்க முடியும் என்பதும், அஞ்சல் வழியிலும் இப்படிப்பை படிக்க முடியும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
படிப்பின் நிலைகள்:

* அடிப்படை நிலை - 4 தாள்கள்
* நிர்வாக நிலை - 8 தாள்கள்
* தொழில் முறை நிலை - 9 தாள்கள்

மேலும், படிப்பு நிலைகளைப் பொறுத்து, 12 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை இன்டர்ன்ஷிப் பயிற்சியும் உண்டு.

தகுதி:

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படை நிலை தேர்வு எழுதலாம். அடிப்படை நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் நிர்வாக நிலை தேர்வில் நேரடியாகச் சேரலாம்.

வேலை வாய்ப்புகள்:

ரூ.5 கோடிக்கு மேல் மூலதனம் செலுத்தப்பட்ட பொதுத்துறை கம்பெனிகள், தனியார் கம்பெனிகள் மத்திய மற்றும் மாநில அரசு கம்பெனிகளில் கட்டாயம் ஒரு கம்பெனி செக்ரெட்டரியை நியமிக்க வேண்டும் என்பது கம்பெனிகள் சட்டம் 2013ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் பங்குச் சந்தையில் தங்கள் நிறுவனத்தைப் பதிவு செய்துள்ள அனைத்து கம்பெனிகளும் கம்பெனி செக்ரெட்டரியை கொண்டிருக்க வேண்டும் என்பதால் இப்படிப்பிற்கான வாய்ப்புகள் பிரகாசம். மேலும், அனுபவம் மற்றும் திறமைக்கு ஏற்ப நிர்வாக இயக்குநர், கம்பெனியின் தலைவர் போன்ற உயர் பதவிகளையும் வகிக்கலாம்.

முக்கியத்துவம்:




உள்நாட்டிலும், அயல்நாடுகளிலும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆளுமைத் திறனும், ஒரு நிறுவனத்தை எப்படி முறையாக வழி நடத்துவது என்கிற ஆற்றலும் பெற்றிருக்கும் மாணவர்கள், நிச்சயம் இந்த ‘கம்பெனி செக்ரெட்டரிஷிப்’ படிப்பைக் கருத்தில் கொள்வது சிறந்தது!
விபரங்களுக்கு: www.icsi.edu

நன்றி: தினமலர்
நாள் : 19.6.18