Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 20, 2018

எம்.பி.பி.எஸ்: இன்று அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு




எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்குகிறது.

நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் 15 சதவீத இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஜூன் 20, 21 ஆகிய இரண்டு நாள்களும் கலந்தாய்வு நடைபெறும். இடங்கள் ஒதுக்கப்பட்டதற்கான முடிவுகள் ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்படும். 



கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெறும் மாணவர்கள் ஜூன் 23-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதிக்குள் தொடர்புடைய கல்லூரிகளில் சேர வேண்டும்.

ஜூலை 6-இல்... இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான பதிவு நடைமுறைகள் ஜூலை 6-ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 10, 11 தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும். அதற்கான முடிவுகள் 12-ஆம் தேதி வெளியிடப்படும். 



இரண்டு கட்ட கலந்தாய்வின் முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாக இருக்கும் இடங்கள் அந்தந்த மாநில ஒதுக்கீட்டுக்கு ஜூலை 23-ஆம் தேதி சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.