கொச்சி துறைமுகத்தில் கப்பல் பயணிகள் செல்லும் 'சாமுத்ரிகா'
முனையத்தில் இலவச வைஃபை இணைய வசதி அண்மையில் துவக்கப்பட்டுள்ளது. இந்த வசதியை தொடங்கியதன் மூலம் இந்தியாவிலேயே இலவச வைஃபை இணைய வசதியை கொண்ட முதல் கப்பல் பயணிகள் முனையம் என்ற பெருமையை சாமுத்ரிகா முனையம் பெற்றுள்ளது.
கொச்சி துறைமுகத்தின் தலைவர் டாக்டர். எம். பீனா, ஐ.ஏ.எஸ். இந்த இலவச இணைய வசதியை தொடங்கிவைத்தார்.கேரள மாநில தகவல் தொழில்நுட்ப இயக்கத்தின் உதவியோடு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.