Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 27, 2018

துபாய் கல்வி நிறுவன வேலைக்கு சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்


அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலம் துபாயிலுள்ள கல்வி நிறுவனத்திற்கு ஆங்கில வழியில் படித்து சி.பி.எஸ்.இ. பள்ளியில் பணி அனுபவம் பெற்ற பிரின்சிபால், சீனியர், ஜுனியர் பள்ளி மேற்பார்வையாளர், மழலையர் பள்ளி ஆசிரியர், ஆரம்ப பள்ளி ஆசிரியர், சமூக அறிவியல் ஆசிரியர், பாடப்பிரிவு தலைமை ஆசிரியர், பெண் இஸ்லாமிய ஆசிரியர் தேவைப்படுகிறார்கள். கல்வித்தகுதி மற்றும் விவரங்கள் நிறுவன வலைதளத்தில் WWW.omc-manpower.com அறிந்து கொள்ளலாம்.



பிரின்சிபால் மாத ஊதியம் ரூ.3 லட்சம், சீனியர், ஜுனியர் பள்ளி மேற்பார்வையாளர் மாத ஊதியம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், மழலையர் பள்ளி ஆசிரியர், ஆரம்ப பள்ளி ஆசிரியர், சமூக அறிவியல் ஆசிரியர், பாடப்பிரிவு தலைமை ஆசிரியர், பெண் இஸ்லாமிய ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.90 ஆயிரம் வரை வழங்கப்படும்.

தகுதி மற்றும் விருப்பமிருப்பின், சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் 2 புகைப்படத்துடன் omcre-sum@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.



மேலும் 28-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகம், கே.புதூர், மதுரை அலுவலகத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் முதற்கட்ட நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.