Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 18, 2019

வரலாற்றில் இன்று 18.03.2019


மார்ச் 18 கிரிகோரியன் ஆண்டின் 77 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 78 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 288 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1241 – போலந்தின் கிராக்கோவ் நகரம் மங்கோலியர்களினால் சேதமாக்கப்பட்டது.
1438 – ஹாப்ஸ்பேர்க்கின் இரண்டாம் ஆல்பேர்ட் ஜெர்மனியின் மன்னனாக முடி சூடினான்.
1850 – அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1874 – வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய் ஐக்கிய அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது.


1909 – ஐனார் டேசாவு குறுகிய அலை வானொலி அலைபரப்பி யை உபயோகித்து முதலாவது ஒலிபரப்பாளரானார்.
1913 – கிரேக்கத்தின் முதலாவது ஜோர்ஜ் மன்னன் படுகொலை செய்யப்பட்டான்.
1915 – முதலாம் உலகப் போர்: கலிப்பொலி சமரில் பெரும் கடற்படைத் தாக்குதல் இடம்பெற்றது. பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக் கப்பல்கள் மூன்று மூழ்கடிக்கப்பட்டன.
1922 – ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தி ஆறு ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார். இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.
1925 – இலினோய் மற்றும் இண்டியானா மாநிலங்களில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 695 பேர் கொல்லப்பட்டனர்.
1937 – டெக்சாஸ் மாநிலத்தில் நியூ லண்டன் நகரில் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட இயற்கை வாயு வெடிப்பில் 295 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொல்லப்பட்டனர்.


1940 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சையும் ஐக்கிய இராச்சியத்தையும் எதிர்த்துப் போரிட ஹிட்லரும் முசோலினியும் கூட்டிணைந்தனர்.
1944 – இத்தாலியில் வேசூவியஸ் மலை தீக்கக்கியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: 1,250 அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பேர்லின் நகரைத் தாக்கின.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானில் ஜப்பானுக்கும் நேச நாடுகளிக்கும் இடையில் ஒகினவா சமர் ஆரம்பமாகியது.
1953 – மேற்கு துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கம் காரணமாக 250 பேர் கொல்லப்பட்டனர்.
1962 – அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது.
1965 – சோவியத் விண்வெளி வீரர் அலெக்சி லியோனொவ் வஸ்கோத் 2 விண்கலத்தின் வெளியே 12 நிமிடங்கள் நடமாடி விண்வெளியில் நடந்த முதல் மனிதன் ஆனார்.


1970 – கம்போடியாவின் மன்னர் நொரொடோம் சிஹானூக் பதவியில் இருந்து அகற்றப்பட்டு லொன் நொல் கம்போடியாவின் பிரதமரானார்.
1971 – பெருவில் நிலச்சரிவு காரணமாக 200 பேர் கொல்லப்பட்டனர்.
1980 – ரஷ்யாவில் வஸ்தோக்-2எம் ஏவுகணை ஏவப்படுகையில் வெடித்ததில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
1989 – எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றினுள் கண்டுபிடிக்கப்பட்டது.
1990- கிழக்கு ஜெர்மனியில் 1932 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற் தடவையாக தேர்தல் இடம்பெற்றது.
2003 – ஐக்கிய அமெரிக்கா ஈராக்க்குடன் போரை ஆரம்பித்தது. ஈராக்கின் மத்தியா வங்கியில் இருந்து 1 பில்லியன் பெறுமதியான பணம் சதாம் ஹுசேனினாலும் அவரது குடும்பத்தினராலும் எடுத்துச் செல்லப்பட்டது.
2003 – விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஆறாம் சுற்றுப் பேச்சுக்கள் ஜப்பான் ஹாக்கோன் நகரில் ஆரம்பமாயின.



பிறப்புக்கள்

1828 – வில்லியம் கிரேமர், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 1908)
1837 – குரோவர் கிளீவ்லாண்ட், ஐக்கிய அமெரிக்காவின் 22வது, 24வது குடியரசுத் தலைவர் (இ. 1908)
1858 – ருடோல்ஃப் டீசல், ஜெர்மனியக் கண்டுபிடிப்பாளர் (இ. 1913)
1919 – இந்திரஜித் குப்தா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவர். (இ. 2001)
1936 – பிரடெரிக் கிளார்க், தென்னாபிரிக்க அதிபர், நோபல் பரிசு பெற்றவர்

இறப்புக்கள்



1889 – வில்லியம் நெவின்ஸ், யாழ் மத்திய கல்லூரி தலைமை ஆசிரியர், ஆங்கிலம்-தமிழ் அகராதி தொகுத்து வெளியிட்டவர்
1996 – ஒடீசியஸ் எலீட்டிஸ், நோபல் பரிசு பெற்ற கிரேக்க எழுத்தாளர் (பி. 1911)
2007 – பாப் வுல்மர், துடுப்பாட்டக்காரரும் துடுப்பாட்ட பயிற்சியாளரும் (பி. 1948)

சிறப்பு நாள்

துருக்கி – கலிப்பொலி நினைவு நாள்