Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 28, 2019

பள்ளி தொடங்க, தரம் உயர்த்த விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை அறிவுறுத்தல்


புதிய பள்ளிகள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அதிகாரிகள் விரைந்து அனுப்பி வைக்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: வரும் கல்வியாண்டில் புதிய தொடக்கப் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்துதல் தொடர்பான கருத்துருகளை விரைந்து அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் போது பள்ளிக்குடியிருப்பு பகுதி சார்ந்த புவியியல் தகவல், போதிய கட்டட வசதிகள், அடிப்படை கட்டமைப்புகள் மற்றும் அருகே உள்ள பள்ளிகளின் விவரங்களையும் சேர்த்து சமர்பிக்க வேண்டும்.



புதிய தொடக்க பள்ளி தொடங்கினால் போதிய மாணவர்கள் இருக்க வேண்டும்

மேற்கண்ட விவரங்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து deesections@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு விரைவாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பி வைப்பதுடன், விண்ணப்பங்களில் உள்ள பள்ளிகளின் முழுவிவர அறிக்கையை இயக்குநரகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு தொடக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.