Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 27, 2019

இனி வாட்ஸ்அப்பில் அதனை செய்ய முடியாது! வந்தது புதிய அப்டேட்!





வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட மெசேஜ்களை இனி ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத கட்டுபாடு கொண்டு வர சோதனை செய்து வருகிறது. சாதாரண மனிதன் தொடங்கி technology ஜாம்பவான்கள் வரை இன்று அனைவரும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு மெசேஜிங் செயலி என்றால் அது whatsapp தான். பேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் செயலியை வாங்கியதில் இருந்து தனது வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதிய புதிய சேவைகளை அறிமுகம் செய்து வருகிறது.


இந்நிலையில், தற்போது வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு நாம் அனுப்பும் தனிப்பட்ட மெசேஜ்களை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடுக்கும் வகையில், "ஆத்தன்டிகேஷன்" என்ற புதிய அப்டேட் கொண்டு வர முயற்சித்து வருகிறது. அதன்பிறகு வாட்ஸ்அப் செயலியில் ஸ்கிரீன் ஷாட் செயல்படாது. அவ்வாறு ஸ்கிரீன் ஷாட் செய்ய முயற்சித்தால் யார் நமக்கு மெசேஜ் அனுப்பினார்களோ அவர்களின் அனுமதியுடன் மட்டுமே ஸ்கிரீன் ஷாட் எடுக்கமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.