Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 18, 2019

சாலை விதிகளில் புதிய மாற்றம்.! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.!!


சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் படி அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு உடனடியாக தண்டனை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டுள்ளது.

தாம்பரம் அடுத்த கேம்ப் சாலையில் கடந்த 8-ம் தேதி அதிவேகமாக சென்ற கார், இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளில் தமழகத்தில் நடந்த விபத்துகள் மற்றும் வழக்குகள் பற்றியும் அரசு தரப்பிலிருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.



இந்த அறிக்கையில் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களுக்கு கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து உடனடியாக தண்டனை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த படும் என்று அறிக்கையில் கூறப்பட்டது.

இந்த திட்டம் மும்பை ஐதராபாத் போன்ற நகரங்களில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விபத்தில் பாதிக்கப்படுவோருக்கு உடனடியாக இழப்பீடு வழங்கும் திட்டம் மற்றும் அதிவேகமாக வாகனங்களை இயக்குபவர்களை உடனடியாக தண்டிப்பது குறித்தும் ஜூலை 1 ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.