Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 4, 2019

7 லட்சம் அரசு காலிபணியிடங்கள்: மத்திய அமைச்சர் தகவல்


புதுடில்லி: நாடு முழுவதும் ஏழு லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அமைச்சர் லோக்சபாவில் தெரிவித்தார்.பார்லி. லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழிலாளர், மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதில் வருமாறு:கடந்த 2018- மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் நாடு முழுவதும் 38.03 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில், 31.19 லட்சம் பணியிடங்கள் நிரப்பபட்டன. மீதம் 6.84 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் அதிகபட்சமாக ரயில்வே துறையில் 2.6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் அரசின் குறிகோள் என்றார்.