Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 4, 2019

ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான மாவட்ட கலந்தாய்வு நாளை தொடக்கம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தொழில்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர் சேர்க்கைக்கான மாவட்ட கலந்தாய்வு, ஜூலை 5 முதல் 13 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: அரசு தொழில்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழில்பயிற்சி நிலையங்கள், சுயநிதி தனியார் தொழில்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் நிகழாண்டுக்கான அரசு இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணைய வழியில் பெறப்பட்டன. விண்ணப்பதாரரின் தரவரிசை பட்டியல் www.skilltraining.tn.gov.in எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. இதன்படி மாணவர்கள் சேர்க்கைக்கான மாவட்ட கலந்தாய்வு ஜூலை 5 (நாளை) முதல் 13 -ஆம் தேதி வரை மாவட்ட நோடல் அரசு தொழில்பயிற்சி நிலையங்களில் நடைபெற உள்ளது.

மேலும் கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம், இடம் உள்ளிட்ட தகவல்கள் இதே இணையதளம் மற்றும் விண்ணப்பத்தின் போது குறிப்பிட்ட அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் அனுப்பப்பட்டு உள்ளன. வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலின் படி, மாணவர்கள் கலந்து கொண்டு விருப்பப்பட்ட தொழில்பிரிவு, தொழில்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றைத் தேர்வு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in எனும் இணையதளம் அல்லது அருகில் உள்ள அரசு தொழில்பயிற்சி நிலையங்களை அணுகலாம். தொடர்புக்கு 044 22501006.

Popular Feed

Recent Story

Featured News