Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 18, 2019

அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவு முறை எந்திரத்தில் தமிழை நீக்கிவிட்டு இந்தி சேர்ப்பு - ஆசிரியர்கள் அதிர்ச்சி!

தஞ்சாவூர் , தர்மபுரி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் நடைமுறை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் தஞ்சாவூர் , தர்மபுரி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் பயோமெட்ரிக் இயந்திரத்தில் ஆங்கிலத்துடன், இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது.



தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் தங்களது வருகையை பதிவு செய்ய பயோ மெட்ரிக் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்ததும் அங்கு இருக்கும் தலைமை ஆசிரியர் அறையில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய எந்திரத்தில் தங்களது கைரேகையை பதிவு செய்வார்கள். அப்போது ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்த நேரத்தை அந்த எந்திரம் காண்பித்து பதிவு செய்யும். பின்னர் ஆதார் எண்களில் கடைசி 8 எண்களை பதிவு செய்ய வேண்டும். இதேபோல் பள்ளி நேரம் முடிந்து வெளியே செல்லும்போதும் கைரேகையை பதிவு செய்வார்கள். இதற்காக அந்த எந்திரத்தில் முன்பு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத்துகள் திரையில் காண்பிக்கும். இந்தநிலையில் அந்த எந்திரத்தில் தமிழ் நீக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக இந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது இந்தி மற்றும் ஆங்கில எழுத்துகள் மட்டுமே தெரிகிறது. இதை ஆசிரியர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் தமிழ் எழுத்துகள் இடம் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். பயோ மெட்ரிக் இயந்திரத்தில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மட்டும் விவரங்கள் பதிவிடப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே மீண்டும் பழைய முறைப்படியே பயோமெட்ரிக் மாற்றியமைத்து, தமிழை சேர்க்க வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.