Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 18, 2019

வரலாற்றில் இன்று 18.08.2019


ஆகஸ்டு 18 (August 18) கிரிகோரியன் ஆண்டின் 230 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 231 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 135 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

1201 – லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது.
1868 – பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.
1877 – செவ்வாய்க் கோளின் ஃபோபோஸ் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1891 – மார்டீனிக் தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் கொல்லப்பட்டனர்.
1917 – கிறீசில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1924 – பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து தனது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது.
1928 – சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.


1938 – நியூயோர்க்கையும் கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கும் ஆயிரம் தீவுகள் பாலத்தை அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் திறந்துவைத்தார்.
1950 – பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட் படுகொலை செய்யப்பட்டார்.
1958 – விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா (Lolita) என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
1971 – வியட்நாம் போர்: ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை திரும்ப அழைக்க முடிவு செய்தன.
1983 – டெக்சாசைத் தாக்கிய அலீசியா என்ற சூறாவளியினால் 22 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

1750 – அந்தோனியோ சாலியரி, இத்தாலிய இசையறிஞர் (இ. 1825)
1975 – பிள்ளையான், இலங்கை அரசியல்வாதி, முன்னாள் போராளி

இறப்புகள்

1227 – செங்கிஸ் கான், மங்கோலியப் பேரரசின் மன்னன்
1850 – ஹோனர் தெ பல்ஸாக், பிரெஞ்சு எழுத்தாளர் (பி. 1799)
1945 – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், (பி. 1897)
2009 – கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர் (பி. 1924)