Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 22, 2019

பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியவர்கள் அசல் மதிப்பெண் சான்று பெறலாம்


புதுச்சேரி: பழைய பாடத்திட்டத்தில், பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாட திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதோர், வருகை புரியாதோருக்கு, பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுத இறுதி வாய்ப்பு அளித்து, கடந்த ஜூன் மாதம் துணைத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, மதிப்பெண் நகல் வழங்கப்பட்டு அவர்கள் கல்லுாரிகளிலும் சேர்ந்துள்ளனர்.இந்நிலையில், துணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி பகுதி மையங்களில் தேர்வு எழுதிய 321 பேருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி முதல்வர் சிவகாமி, சான்றிதழ் வழங்கி பணியை துவக்கி வைத்தார். பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதியவர்கள், பள்ளி வேலை நாட்களில் அலுவலக நேரங்களில் வந்து அசல் மதிப்பெண் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம் என, அவர் தெரிவித்தார்.