Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 23, 2019

நூலகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு செப்டம்பரில் நேர்காணல் தேர்வு


நூலகர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பரில் நேர்காணல் நடத்தப்படும் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பல்வேறு துறைகள், பணிகளில் அடங்கிய நூலகர் பதவிக்கு 64 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி நேர்காணல் தேர்வு நடத்தப்படும்.

சுரங்கத் துறைக்கான நிலவியலாளர் பணியிடத்துக்கு 5 பேரும், அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் பணியிடத்துக்கு 5 பேரும், மருத்துவ ஆய்வாளர், இளநிலை பகுப்பாளர் பதவிக்கு 108 பேரும், கால்நடை பராமரிப்புக்கான ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு 52 பேரும் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களது சான்றிதழ்களை வரும் 29-ஆம் தேதி முதல் செப்டம்பர் 6-ஆம் தேதிக்குள்ளாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தேர்வாணையம் கேட்டுக் கொண்டுள்ளது.